பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒச்சாயி என்ற பெண் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த நிலையில் தனது 70வது வயதில் அம்மனுக்கு விரதமிருந்து வேண்டியதன் பலனாக 70வயதில் கருத்தரித்து குழந்தைகள் பிறந்ததாகக் கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் அளித்த அம்மனுக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.போத்தம்பட்டி எனும் இடத்தில் கோவில் எழுப்பி வழிபாடு நடத்தி வந்த நிலையில் இந்த பழமை வாய்ந்த திருக்கோவில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு பூஜை நடைபெற்றது.
இந்த குடமுழக்கு பூஜையில் புன்னூர் அய்யனார், பூர்ணகலா, புஷ்பகலா என மூன்று சாமிகளுக்கும், ஒச்சாண்டம்மன், மூலவிநாயகர், மயாண்டி சுவாமிகளுன் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இந்த கோவிலில் வந்து விரதமிருந்து அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்







You must be logged in to post a comment.