நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் சுத்தம் சோறு போடும் மற்றும் டெங்கு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுகாதாரம் குறித்தும்,அதை பேணுவதன் அவசியம் குறித்தும் பேசிய ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா சுகாதாரம் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் உரை நிகழ்த்தினார்.பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் செவிமடுத்தனர்.
அதன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை பள்ளி கல்வித்துறையில் மத்திய அரசு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும் என்றார்.உலகத்தில் எந்த நாட்டிலும் பொது தேர்வு நடத்தியதில்லை. இந்த கோட்பாடு என்பது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க கூடாது சூட்சமத்தோடு தமிழக அரசு நிறைவேற்ற பார்க்கிறது என்றார்.அரசின் இந்த நடைமுறையை தி.மு.க ஒரு போதும் ஏற்காது என கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.