நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் சுற்றுவட்டாரப் பால் உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களிடமிருந்து விற்பனையாளர்கள் கொள்ளை இலாபம் அடிப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.விவசாயிகளிடம் பால் கொள்முதல் லிட்டருக்கு ரூ 25 / மட்டுமே. ஆனால் வியாபாரிகள் விற்கும் விலை பொது மக்களான நுகர்வோரும் லிட்டர் ருபாய் 40க்கும்,தேனீர் கடைகளுக்கு லிட்டர் ரூ 35க்கும் விற்பனை செய்து கொள்ளை லாபத்தில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இன்னும் கொடுமை என்ன என்றால் இரட்டை அளவை முகவைகளை பயன்படுத்தி வருவதாகவும்,அதில் கொள்முதல் செய்ய பயன்படுத்தப்படும் அளவை முகவை அதிக அளவில் பால் எடுக்கும் வகையில் 1லிட்டர் அளவிட்டால் 1.100 க்கு மேல் பிடிக்கும் வகையிலும், விற்பனைக்காக பயன்படுத்தும் அளவையில் குறைவான அளவில் பிடிக்கும் வகையிலும் பயன்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதில் பொதுமக்களான நுகர்வேரும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் அதிக அளவில் பாதிக்க படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.