கன்னியாகுமரி மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவம் (36) .இவர் கன்னியாகுமரி பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார் . சம்பவத்தன்று இவரது கடையில் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த அஜித்(21) என்பவர் உள்ளே நுழைந்து ரூபாய் 2000/- மற்றும் அங்கிருந்த சாவியை எடுத்து ஒரு காரையும் திருடி சென்று விட்டார். பின்னர் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் முத்து குற்றவாளி அஜித்தை கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.