17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை – சாலையில் தூக்கி எறியப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு..போலிசாா் மீட்பு

மதுரை – சாலையில் தூக்கி எறியப்பட்ட பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் சிசு..போலிசாா் மீட்பு

எழுதியவர்: mohan September 16, 2019, 11:55 am

 மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் ஜீவா நகர் அருகே உள்ள வள்ளுவர் தெற்குதெரு எனுமிடத்தில் இன்று 16.09.19அதிகாலை பச்சிளம் குழந்தை அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர்  போய் பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று துணியால் கட்டப்பட்டு இருந்தது. இது குறித்து ஜெயந்திபுரம் காவல் நிலையத்துக்கும் மற்றும் 108 குழந்தைகள் வாகனத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைவாக வந்த ஜெயந்திபுரம் காவல்துறையினரும் 108 முறை வாகனமும் குழந்தையை மீட்டு மதுரை அரசு ராஜாஜி குழந்தைகள் பிரிவு மருத்துவ பிரிவில் சோ்த்தனா்.      இதுகுறித்து ஜெயந்திபுரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .அப்பகுதி மக்கள் கூறுகையில் நாய் கூட இன்று தன் குட்டியை மழையில் நனையாமல் பார்த்துக் கொள்கிறது .கல்நெஞ்சம் படைத்த ராட்சசி  எப்படி மனம் வந்தது என்று தெரியவில்லை என அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!