இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக செந்தனேந்தல் லட்சுமி ( 22) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 16.9.2019 அதிகாலை 2 மணிக்கு மேல் பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தை தலை திரும்பவில்லை. அங்கு பிரசவம்
பார்க்க போதிய வசதி இல்லை. இது குறித்து கர்ப்பிணி லட்சுமி, அவருடன் இருந்த உறவினர்களிடம், கமுதி அரசு மருத்துவமனை கொண்டு செல்லுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். மேல் சிகிச்சைக்காக அருப்புகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அருப்புகோட்டை செல்லும் வழியில் அப்பெண்ணிற்கு வலி அதிகரித்ததால் மருத்துவ உதவியாளர் செல்வகுமார் சாமர்த்தியமாக பிரசவம் பார்த்ததை யடுத்து காலை 3:43 மணிக்கு ஆம்புலன்சில் ஆண் குழந்தை பிறந்தது. தாய், குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டு அருப்புகோட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கமுதி அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்கள் கை விரித்த பெண்ணிற்கு சுகப்பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் செல்வகுமார், ஓட்டுநர் மாடசாமி ஆகியோருக்கு லட்சுமியின் கணவர் சங்கர் மற்றும் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.
கமுதி -108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை
எழுதியவர்: mohan September 16, 2019, 11:44 am




You must be logged in to post a comment.