தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள பிள்ளையார் கோவில் அருகே இரண்டு இளைஞர்களை ஏழு பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9 வது தெருவை சேர்ந்தவர் விவேக் ( 38), சிவந்தாகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( 38) இவர்களை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே மாலை இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதனையடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த இருவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமணைக்கு கொண்டு வரும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் இளைஞர்கள் 2பேர் வெட்டி கொலை.
எழுதியவர்: mohan September 16, 2019, 11:12 am




You must be logged in to post a comment.