18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியை பசுமையாக்க மக்கள் பாதையின் புதிய முயற்சி – மணமக்கள் மரக்கன்றுகள் நடும் விழா

இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியை பசுமையாக்க மக்கள் பாதையின் புதிய முயற்சி – மணமக்கள் மரக்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: mohan September 15, 2019, 4:34 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் பசுமை இராஜசிங்கமங்கலத்தை உருவாக்கும் நோக்கத்தோடு இராஜசிங்கமங்கலம் பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.மேலும் தொடர்ச்சியாக களப்பணி செய்து மரக்கன்றுகள் நடுவது, மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு , நீர்நிலைகளை பாதுகாக்க குளங்கள் அருகே பனை விதைகளை நடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 பேரூராட்சியை பசுமையாக்க மக்கள் பாதையின் புதிய முயற்சியாக திருமண விழா, குழந்தைகள் பிறந்தநாள் விழா, புதுமணை புகுவிழா , ஆண்டு விழா ஆகிய தினங்களில் , அவர்களது இல்லங்களில் மரக்கன்றுகளை அவர்களையே நட வைத்து பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தங்களது இல்ல நிகழ்வுகளில் மரக்கன்றுகள் நடும்பணியை தொடர அறிவுறுத்தப்படுகிறது.இன்றைய திருமண நிகழ்வில் மணமக்கள் மரக்கன்றுகளை நட்டு இராஜசிங்கமங்கலத்தை பசுமையாக்க உதவி செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!