நாம் தமிழர் கட்சி சார்பில் “பத்தாண்டு பசுமைத் திட்டம் பல கோடி பனைத் திட்டம்” என்ற நோக்கத்தோடு சுற்றுச்சூழல் பாசறையின் மூலம் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக பனை விதைகளை நடும் பனைத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று15.9.19 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கண்மாய் கூத்தியார் குண்டு பகுதியில் 1000க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன. நாம் தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளர் செ.வெற்றிக்கு மரன் அவர்கள் இந்த விழாவில் பங்கேற்று, பனை விதைகளை நட்டு வைத்தார். அவருடன் அப்பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வி காளமேகம் மதுரை




You must be logged in to post a comment.