17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மருத்துவரின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் பலி .மதுரையில் பரபரப்பு

மருத்துவரின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் பலி .மதுரையில் பரபரப்பு

எழுதியவர்: mohan September 15, 2019, 4:22 pm

மருத்துவரின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் பலி மதுரையில் பரபரப்பு.மதுரை புதூரில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு – உறவினர்கள் புகார்.மதுரை கே புதூர் கற்பக நகரைச் சேர்ந்த மணி முத்துவின் மனைவி சக்திகாளி நிறைமாத கர்ப்பிணி.அவக்கு பிரசவ வலி ஏற்பட்டவுடன்  மதுரை கே. புதூரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்அவருக்கு சுகபிரசவத்திற்காக மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்க்க முற்பட்டனர்.நள்ளிரவு வரை சுகபிரசவத்துக்காக முயற்சிகள் மேற்ெகாண் டும் பலனளிக்கவில்லை.மேலும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் செவிலியர்களுக்கு செய்வதறியாது திகைத்தனர் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்கர்ப்பிணி சக்தி காளி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். உடனடியாக உடற் கூராய்விற்காக பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மதுரை கே.புதூரில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.கர்ப்பிணி சக்திகாளியின் கணவர் மணிமுத்து தனது மனைவி சாவில் சந்தேகம் உள்ளது. தவறான சிகிச்சையால் தனது மனைவி இறந்து விட்டார் என எனகே.புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!