கீழக்கரையில் மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருந்தாலும் 24 மணிநேரமும் செயல்பட்டும் மருத்துவமனை இல்லாதது வளர்ச்சி அடைந்த கீழக்கரையில் பெரும் குறையாகவே இருந்து வருகிறது.தற்போது அரசு மருத்துவமனை,தனியார் மருத்துவமனை இருந்தாலும் அவசர காலங்களில் மற்றும் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லததால் இந்த பகுதி மக்கள் தொடந்து மருத்துவம் பார்க்க முடியாமல் அவதிப்பட்டுவதுடன்,கீழக்கரையில் இருந்து 18 கிலோமீட்டர் தூரம் உள்ள இராமநாதபுரம் மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள்.இந்த குறைகயை அறிந்த பிரபல கீழக்கரை மருத்துவர் நசீரா பர்வீன் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த அன்பு கிளினிகில் அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் தனது ஆயிஷா கிளினிக்கை இடம் மாற்றம் செய்து 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக திறக்க முடிவு செய்து இன்று 15.0919 காலை 10 மணியளவில் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவை இராமநாதபுரம் அக்ரஹாரம் முஹம்மது அலி ஜின்னா பள்ளி இமாம் முஹம்மது குர்சீத் துஆ செய்து தொடங்கி வைத்தார்.இந்த திறப்பு விழாவில் ஜூம்ஆ பள்ளி ஜமாஅத் உறுப்பினர் முஹம்மது ஜமாலுதீன்,கிழக்குத்தெரு ஜமாஅத் துணைத்தலைவர் முஹம்மது அஜிஹர்,சட்ட விழிப்புணர்வு இயக்கம் உறுப்பினர் சீனி முஹம்மது,மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம்,மருத்துவர் ஜெயலட்சுமி,ஆயிஷா பர்வீன்,முருகேசன்,பதுருசமான் என்ற அண்ணாவி ஆகியோர் கலந்து கொண்டனர்.முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை டாக்டர் நசீரா பர்வீன் வரவேற்றார்.நிறைவாக கலீல் ரஹ்மான் நன்றி கூறினார்.இந்த 24 ,மணி நேர மருத்துவமனை பற்றி டாக்டர் நசீரா பர்வீன்,ஆயிஷா பர்வீன் கூறுகையில் இந்த மருத்துவமனை அனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் தொண்டு மனபான்மையோடு செயல்படும் என்றனர்.




You must be logged in to post a comment.