திருநெல்வேலி சந்திப்பு தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் அருகில் புதிதாக மற்றொரு பாலம் கட்டப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள பாலத்தையும்,தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் இணைப்பதற்காக இணைப்பு சாலை அமைக்கும் பணி 14.09.19 சனிக்கிழமை நடைபெற்றது.இந்த பணியின் போது பாலத்தின் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்ட வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டு ஆக்கரமிப்புகள் அகற்றப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் தற்போது புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு இந்த பாலம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது.எனவேதற்போது அந்த பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக நெல்லை சந்திப்பு சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் சிலை அருகில் உள்ள கடைகள், வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டதை தொடர்ந்து அகற்றப்படாமலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
நெல்லை கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மாலிக், கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர்கள் டேனியல், வேலாயுதம் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லை மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.