தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் உயரதிகாரிகள் முதல் காவலர்களை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் செப்.15 அண்ணா பிறந்த நாளையொட்டி அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், 100 பேருக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்ட தலைமையிட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் டி.மங்களேஸ்வரன், ராமநாதபுரம் கடலோர காவல் பாதுகாப்பு
குழும கூடுதல் கண்காணிப்பாளர் ஏ. இளங்கோ, மதுரை நுண்ணறிவு உதவி ஆணையர் எஸ்.சிவக்குமார், விருதுநகர் வணிக குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் எஸ்.கணேஷ் தாஸ், மதுரை தனிப்பிரிவு ஆய்வாளர் பி.கனகராஜ், மதுரை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் என்.ஹேமலதா, தூத்துக்குடி கடலோரக் காவல் ஆய்வாளர் பி.வி.நவீன், மதுரை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ஏ.தர்மலிங்கம், மதுரை தகவல் தொழில் நுட்ப பிரிவு ஆய்வாளர் கே.எம்.சரவணன், திருப்பரங்குன்றம் மகளிர் காவல் ஆய்வாளர் டி.கீதா ரமணி, ராமநாதபுரம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஏ.லிங்க பாண்டியன், பாளையங்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் கே.தில்லை நாயகம், தூத்துக்குடி புதுக்கோட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் வி.காமராஜ், சாத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் எல்.புகழேந்தி, திண்டுக்கல் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர்.கோட்டை ராஜன், தேனி ஊழல் மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் எம். சுருளி வேல், நெல்லை மது விலக்கு (அயல் பணி) சிறப்பு உதவி ஆய்வாளர் எம்.ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மது விலக்கு ஆய்வாளர் எஸ்.ராதா, தேனி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சி. உதயக்குமார்,
குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும சிறப்பு உதவி ஆய்வாளர் வி.சுரேஷ் குமார்,நாகர்கோவில் ஊழல் மற்றும் கண்காணிப்பு தலைமை காவலர் எஸ்.என்.ஸ்ரீகுமார்,உள்பட 100 பேருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு கூடுதல் செயலர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் 21 பேர் உள்பட 100 பேருக்கு அண்ணா விருது தமிழக அரசு அறிவிப்பு
எழுதியவர்: mohan September 15, 2019, 11:50 am




You must be logged in to post a comment.