18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக தலைவர் ஸ்டாலின் கட்டளைக்கு இணங்க மதுரை மாவட்டத்தில் எங்கையுமே பேனர் வைக்க மாட்டோம், நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் – என உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்

திமுக தலைவர் ஸ்டாலின் கட்டளைக்கு இணங்க மதுரை மாவட்டத்தில் எங்கையுமே பேனர் வைக்க மாட்டோம், நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் – என உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்

எழுதியவர்: mohan September 15, 2019, 11:38 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கான தி.மு.க இளைஞரணி உறுப்பினர் சேர்க்கும் முகாம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் உறுப்பினராக சேர்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் திமுக தலைவர் என்ன உத்தரவிட்டாலும் அதை நடைமுறை படுத்தி வருகிறோம், அதுபோல தான் தற்போது பேனர்கள் கலாச்சாரத்தை மாற்ற பேனர்கள் வைக்க கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது கட்டளைக்கு இணங்க நாங்களும் மதுரை மாவட்டத்தில் எங்கையுமே திமுகவினர் பேனர் வைக்க மாட்டோம், அனைத்து நிர்வாகிகளுக்கும் இதை அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!