முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் சார்பாக எழுத்து மூலமான தகவல் பற்றிய விழிப்புணர்வு நடைப்பெற்றது. முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்ஜாய்ஸ் தேவகிருபை, ,உதவிப் பேராசிரியை, தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கீழக்கரை. அவர்களுக்கு கல்லூரி முதல்வர் நாதிரா பானு அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர், மாணவிகளுக்கு எழுதும் திறனை வளர்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறையையும், எழுதுதல், படித்தல், பேசுதல் என எல்லாவற்றிற்கும் பயிற்சி மேற்க்கொள்ள வேண்டும் என்றும் கூறி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வை ஆங்கிலத் துறையைச் சார்ந்த துறைத் தலைவர் மெகருன்னிஷா, உதவிப் பேராசிரியைகள் தூர்கா , .ஜெர்மியா ஜென்மரசி, .விக்னேஸ்வரி சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.










You must be logged in to post a comment.