தேனிமாவட்டம் சின்னமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீப்பாலக்கோட்டை பகுதியில் கடந்த 06.04.2015ந்தேதி சின்னையன் என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் இறந்தவரின் மனைவி விஜயலட்சுமி என்பவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் .மனோகரன், வைரமுத்து,
.வைரம்ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இவ்வழக்கை விசாரணை செய்த தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன் வழக்கின் இறுதி விசாரணையில் குற்றம் சுமத்தப்பட்ட மூன்று நபர்களும் குற்றவாளிகள் என கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹5500/- அபராதம் கட்ட தவறினால் கூடுதல் 7 மாத சிறை தண்டனை என கூறி தீர்ப்பளித்தார்.இவ்வழக்கினை சிறப்பான முறையில் புலன் விசாரணை செய்த காவல்துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர், காவலர்கள் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.