சமீபத்தில் சென்னையில் ஒரு கட்சி வைத்திருந்த கட்அவுட் சரிந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண்மனி உயிரிழந்தார்.இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை எற்படுத்தியது.இதனையடுத்து ஆளும்கட்சி உள்பட பல்வேறு
அரசியல் கட்சிகளும் ப்ளக்ஸ் பேனரை அகற்ற தமது கட்சியனருக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் கட்சி சார்ந்தது மற்றும் தனியார் திருமண நிகழ்ச்சி போன்ற ப்ளக்ஸ் பேனர்களை அகற்றிவருகின்றனர். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அரசியல் கட்சியினர் ப்ளக்ஸ் பேர்டுகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.அதிமுக திமுக மற்றும் தனியார் ப்ளக்ஸ் பேனர்கள் அதிகளவில் காணப்படுகின்றன.இவற்றை அகற்ற அரசியல் கட்சிகளும் முன் வரவில்லை.அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிளக்ஸ் போர்டுகளை அகற்ற உத்தரவிட்டாலும் அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் அகற்றாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
எழுதியவர்: mohan September 14, 2019, 6:36 pm




You must be logged in to post a comment.