தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள் என அனைத்தையும் பொதுப்பணித்துறையின் கீழ் தூர்வாரி வருகின்றன.; மதுரை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளை தூர்வார ரூ 31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உசிலம்பட்டி கிராமப் பகுதியிலுள்ள பல்வேறு நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினராக உள்ள பா.நீதிபதியின் சொந்த கிராமமான கணவாய்ப்பட்டியிலுள்ள மிகப்பெரிய கண்மாய் இதுவரை தூர்வாரப்படவில்லை.தற்போது தூர்வாரப்படும் நீர்நிலைகள் பட்டியலில் இக்கண்மாய் இல்லை.
வகுரணி அயோத்திபட்டி நாவார்பட்டி மேட்டுப்பட்டி கணவாய்ப்பட்டி போன்ற கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய பழமைவாய்ந்த கண்மாய் தற்போது புதர்கள் மண்டி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.இக்கண்மாய் தூர்வராப்பட்டால் சுற்றியுள்ள 10 கிராமங்கள் பாசன வசதி பெறும்.ஊருக்குத்தான் உபதேசம் என்பது போல் தன் சொந்த கிராமத்தையே சடடமன்ற உறுப்பினர் புறக்கணித்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனிவரும் காலங்கள் மழை காலங்கள் என்பதால் உடனடியாக தமிழக அரசு இந்த கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றியும், கண்மாயை தூர்வாரி பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.