17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் நடைபயிற்சி செல்வோர் நலச்சங்கம் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி கலந்துகொண்டு மரம்கன்றுகள் வைத்து தொடங்கிவைத்தார்.

உசிலம்பட்டியில் நடைபயிற்சி செல்வோர் நலச்சங்கம் சார்பில் மரம் நடும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி கலந்துகொண்டு மரம்கன்றுகள் வைத்து தொடங்கிவைத்தார்.

எழுதியவர்: mohan September 14, 2019, 5:52 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலப்பள்ளி மைதானத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர்கள் காலை, மாலை என இரண்டு வேளையிலும் உடல் ஆரோக்கியத்திற்காக நடைபயிற்சி மேற்கொள்வர். இந்நிலையில் நடைபயிற்சி செல்வோர் நலச்சங்கத்தினர் மைதான வளாகத்தில் மரம் நடும் விழா நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்திருந்தினர். இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரம் நட்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நடைபயிற்சி செல்வோர் நலச்சங்க நிர்வாகிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!