18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தைமாரியம்மன், பாலவிநாயகர் கோவிலை புரணமைப்பு செய்து குடமுழுக்கு பூஜை

உசிலம்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தைமாரியம்மன், பாலவிநாயகர் கோவிலை புரணமைப்பு செய்து குடமுழுக்கு பூஜை

எழுதியவர்: mohan September 14, 2019, 5:45 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு மாமரத்துப்பட்டியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தை மாரியம்மன், பாலவிநாயகர் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் புரணமைப்பு பணிகள் செய்யப்பட்டும் மந்தை மாரியம்மனுக்கு 3 அடி உயரத்தில் சிலையும், பாலவிநாயகருக்கு 5 அடி உயரத்தில் சிலையும் பிரதிஷ்டை செய்து இன்று குடமுழக்கு பூஜை நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கும் பாலவிநாயகருக்கும், சந்தனம், குங்குமம் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.இந்த குடமுழுக்கு விழாவில் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மந்தை மாரியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!