மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான எருமார்பட்டி, கணவாய்பட்டி, கோடாங்கநாயக்கன்பட்டி போன்ற கிராமப் பகுதிகளில் மழையை நம்பி நிலக்கடலையை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் கிணற்றுப்பாசனம் அதிகளவில் இல்லாததால் வானம் பார்த்த பூமியாக உள்ளது.ஆனால் தற்போது உசிலம்பட்டி பகுதியில் போதிய மழையில்லாததால் நிலக்கடலை செடிகள் தற்போது கருகிவருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.வேளாண்மைத்துறை அலுவலத்திலிருந்து விதை வாங்கி நிலக்கடலை பயிரிட்டபோதும் தற்போது பயிர்கள் கருகி வரும் நிலையில் பயிர்காப்பீடு குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது பருத்தி போன்ற பயிர்களுக்குத்தான் பயிர்காப்பீட்டுத்திட்டம் உள்ளதாகவும் கடலை போன்ற செடிகளுக்கு காப்பீடு இல்லை என அலட்சியமாக பதில்தெரிவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக தமிழக அரசு கவனத்தில் எடுத்து கருகிவரும் நிலக்கடலை செடிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழையில்லாததால் கருகிவரும் நிலக்கடலை செடிகள். இதனால் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துளளனர்.
எழுதியவர்: mohan September 14, 2019, 5:40 pm




You must be logged in to post a comment.