சிவகங்கை அருகே பாசாங்கரை கிராமத்தில் விவசாயி ஒருவர், குறிப்பிட்ட தேதி முடிவு செய்து, அன்றைக்கு ஜீவசமாதி அடையபோவதாக அறிவித்தார்.இதையொட்டி சிவகங்கை, படமாத்தூர் உட்பட சுற்று வட்டார கிராமத்தில் கூட்டம், கூட்டமாக பாசங்கரைக்கு சென்று அந்த விவசாயியை பார்த்துவிட்டு சென்றனர்.இந்த தகவல் அறிந்த திருப்புவனம் அருகிலுள்ள கே. பெத்தானேந்தல் காலனியைச் சேர்ந்த உடையப்பன் மகன் பழனிக்குமார்(20), அவரது உறவினரான மீனாட்சி சுந்தரம் மகன் முனீஸ்பாண்டி(19) இருவரும் கடந்த வியாழக்கிழமை அன்றிரவு 9 மணிக்கு பைக்கில் பாசங்கரை கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். கானூரை அடுத்து கல்லூரணி விலக்கை கடந்து சென்றபோது, ரோட்டில் நடப்பட்டு இருந்த மைல் கல் மீது பைக் மோதியது.
இதில் தூக்கிய எறியப்பட்டு இருவரும் காயம் அடைந்தனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பழனிக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.முனீஸ் பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரானை நடத்தி வருகின்றனர்.ஜீவசமாதி அடையபோவதாக விவசாயி அறிவித்த செய்தியால் இளைஞர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.