18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருட்டு மணல் கடத்தியவர்கள்மீது வழக்கு பதிவு.டிப்பர் லாரி, ஜேசிபி பறிமுதல்

திருட்டு மணல் கடத்தியவர்கள்மீது வழக்கு பதிவு.டிப்பர் லாரி, ஜேசிபி பறிமுதல்

எழுதியவர்: mohan September 14, 2019, 1:34 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜேசிபி கள், டிப்பர் லாரிகளை தென்கரை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தென்கரை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.மணத் திருட்டில் பயன்படுத்திய வாகனம் மணல் கொள்ளையன் குண்டாஸ் சுரேஷ்க்கு சொந்தமானது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள பாப்பையன்பட்டி கண்மாய் பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக வண்டல் மண் அள்ளி கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணல் கொள்ளையர்களை பற்றி தென்கரை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தென்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஈஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு இரண்டு டிப்பர் லாரிகள்  மற்றும் ஒரு ஜேசிபியுன் T. கள்ளிபட்டியைச் சார்ந்த மணி மகன் முத்துப்பாண்டிஅழகர்சாமி மகன் கிருஷ்ணன், அம்மாபட்டியைச் சார்ந்த பெருமாள் நாயக்கர் மகன் சீரங்கராஜ், சாவடிப்பட்டியை சார்ந்த பிரபு, அட்டணம் பட்டியைச் சார்ந்த சுப்புராஜ் மகன் பாண்டியன் ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இவர்களில் கிருஷ்ணன், பிரபு, மற்றும் ஜேசிபி ஓனர் கைலாசபட்டியைச் சார்ந்த தங்கராஜ் மகன் சுரேஷ்  ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் மீது தென்கரை போலீசார் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த வாகனங்களை பறிமுதல் செய்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தலைமறைவான கனிம வளக் கொள்ளைக் கும்பலை தேடி வருகின்றனர். மணல் கொள்ளையனான சுரேஷ் (எ) குண்டாஸ் சுரேஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!