மதுரை அண்ணாநகர் சரக எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் கே.கே.நகர் கோ.புதூர் பகுதிகளில் இரவில் வீட்டை உடைத்து பணம் நகை திருட்டில் ஈடுபட்ட எதிரிகளை பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,உத்தரவுப்படி காவல் துணை ஆணையர்.செந்தில்குமார் (குற்றம்), நேரடி மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் அண்ணாநகர் குற்ற சரகம் வேணுகோபால் தலைமையில், அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர்சங்கர்கண்ணன் கீழ் சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுப்பிரமணி, பன்னீர்செல்வம், தலைமை காவலர் போஸ், முதல்நிலை காவலர் வெங்கட்ராமன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைத்து எதிரிகளை தேடிவந்த நிலையில் பழங்குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தேரிகுடியிருப்பை சேர்ந்த ரெங்கசாமி மகன் பெரியசாமி மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. திருச்செந்தூர் தூத்துக்குடி மற்றும் பல இடங்களில் எதிரியை தேடி வந்த நிலையில் (12.09.2019) மதுரை மேலமடை பஸ் ஸ்டாப் அருகில் வாகன சோதனை செய்த போது TN 60 AD 7632 TATA TIAGO காரில் வந்த மேற்படி எதிரியையும் அவருடன் வந்த மதுரை அண்ணாநகர் ரவீந்திரன் என்பவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் இருவரும் அண்ணாநகர் மற்றும் புதூர் காவல்நிலையப் பகுதிகளில் மொத்தம் 33 கன்னக்களவு குற்றங்கள் செய்ததாக ஒப்புக்கொண்டனர். எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 132 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட TN 60 AD 7632 TATA TIAGO காரும் கைப்பற்றப்பட்டது. எதிரிகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வழக்குகளை துப்பு துலக்கி எதிரிகளை கைது செய்து துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம் வெகுவாக பாராட்டினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.