17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவர்கள் நன்கு படித்தால் நிச்சயம் பொருளாதார வளர்ச்சி பெற முடியும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் .தேன்மொழி சேகர் பேச்சு

மாணவர்கள் நன்கு படித்தால் நிச்சயம் பொருளாதார வளர்ச்சி பெற முடியும் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் .தேன்மொழி சேகர் பேச்சு

எழுதியவர்: mohan September 14, 2019, 11:31 am

  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில்  2018_2019 ஆம் படித்த 123  மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் தலைமையில் நடைபெற்றது..      பள்ளித் தலைமை ஆசிரியர் அமுதா வரவேற்று பேசினார். இவ் விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் யாகப்பன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர் அவர்கள் முன்னிலை வகித்தனர்.   மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ். தேன்மொழி சேகர் பேசியதாவது:    இன்றைய சூழ்நிலையில் அனைத்து தரப்பு பொருளாதார நிலையும் கல்வியை மையமாக வைத்துத்தான் பொருளாதார நிலை உயர்கிறது. எனவே இன்றைய மாணவர்களாகிய நீங்கள் வருங்காலங்களில் பொருளாதார நிலையில் உயர நிச்சயமாக இன்றைக்கு நீங்கள் கல்விப் பருவத்தில் படிக்கும் இந்தக் கல்வி தான் உறுதுணையாக இருக்கும் எனவே அரசு வழங்கும் பல்வேறு கல்வி உபகரணங்களை  பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.         இவ்விழாவில் நிலக்கோட்டை ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க பொருளாளர் டாக்டர் .அழகுராஜ், பள்ளி தமிழ் ஆசிரியர் கணேசன் முதுநிலை ஆசிரியர்கள்  சசிபாபு, முத்துலெட்சுமி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!