மதுரை மாவட்டம் சேடபட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் அய்யனார் ,இவர் தனது மகன் பிறந்த நாளை ஒரு காப்பகத்தில் கொண்டாட விரும்பினார்.
எனவே அவர் T.கல்லுப்பட்டி, அம்மாபட்டி அருகே உள்ள மனநல காப்பகத்தில் 30க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டோர் வசிப்பதை அறிந்து, அவர்களுக்கு இன்று மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்க ஏற்பாடு செய்து அனைவருக்கும் உணவு வழங்கினார். இச்செயல் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.