18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “சிறப்பு கிராம சபை கூட்டம்”

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “சிறப்பு கிராம சபை கூட்டம்”

எழுதியவர்: mohan September 13, 2019, 8:15 pm

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திண்டியூர், வரிச்சூர்,இளமனூர், சக்கிமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் “போஷன் அபியான்” திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் கேரி பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக “சிறப்பு கிராம சபை கூட்டம்” நடைபெற்றது.

இதில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராம மக்களிடையே உரையாற்றினார். இந்நிகழ்வில் கிளார்க் சசிகுமார்,சரவணன், ராஜபிரபு, வீரணன் மற்றும் போஷன் அபியான் திட்டத்தின் மதுரை கிழக்கு ஒருங்கிணைப்பாளர் இலக்கியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹேமலதா, ஜெயசித்ரா மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக  மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!