17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு அருகே தேங்கல்மேடு நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவு பகுதியில் மின்விளக்கு அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

பாலக்கோடு அருகே தேங்கல்மேடு நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவு பகுதியில் மின்விளக்கு அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

எழுதியவர்: mohan September 13, 2019, 11:05 am
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேங்கல்மேடு நெடுஞ்சாலையில் அபாயகரமான வளைவு பகுதியில் மின்விளக்கு மற்றும் எச்சரிக்கை இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி வனப்பகுதியில் உள்ளதால் வனவிவங்குகள் சாலையில் நடமாடியும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் ஆபத்தான வளைவு பகுதியில் வாகன ஓட்டிகள் வாகனங்களை நேரக இயக்குவதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அடிக்கடி நடந்து வருகின்றது.
பாலக்கோட்டில் இருந்து  பெல்ரம்பட்டி  செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இப்பகுதியில் தண்ணீர் லாரிகள், கல்குவரி லாரிகள் என  இரவு பகலாக வாகனங்கள் இப்பகுதியில் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மின்விளக்கு மற்றும்
எச்சரிக்கை பலகை சாலையில் ரிப்லெக்ஸ் ஒளி எழுப்பும் தகடு ஆகியவை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!