17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆத்தூர் பகுதியில் இனையதள சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி

ஆத்தூர் பகுதியில் இனையதள சேவை பாதிப்பால் பொதுமக்கள் அவதி

எழுதியவர்: mohan September 12, 2019, 12:10 pm

 திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் இனையதள சேவை பாதிப்பால் பல்வேறு அரசு நல உதவிக்கு சான்றிதழ் பெறுவதற்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் குறிப்பிட்ட காலத்தில் சான்றிதழ் பெறமுடியாமல் மிகுந்த சிறமத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. 12/09/19 இன்றுவரை நூறுக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் இனையதளம் கிடைக்காத காரணத்தால் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், புதிய வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் வாக்காளர்களுக்கான அடையாள அட்டை அச்சிடப்படும் எந்திரம் பழுதாகி பலமாதங்களாகியும் இதுவரை சரிசெய்யப்படாத நிலை தொடர்வதால் வாக்காளர் அட்டைக்காக வாக்களர்களும் கனினி வழி சான்றிதழ் வேண்டி பொதுமக்கள் ஆத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அலையும் நிலை தொடர்வதால் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி தலையீட்டின் அடைப்படையில் சீர்படுத்தி தந்து உதவுமாறு பாதிப்பில் உள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!