17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி 10வது வாா்டில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்.சாி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை .

உசிலம்பட்டி 10வது வாா்டில் விவசாய நிலங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்.சாி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை .

எழுதியவர்: mohan September 11, 2019, 2:52 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியான 10 வது வார்டு குமார்தேவா தெரு அருகே விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் தற்போது பருத்தி மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் விவசாய நிலத்தில் கடந்த 1 வருடங்களாக மின்வயர்கள் தாழ்வான பகுதியில் கையில் தொடும் அளவிற்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் தொங்கி கொண்டிருக்கிறது. இது குறித்து உசிலம்பட்டி மின்சாரதுறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை சரி செய்யவில்லை எனவும் விபத்தை ஏற்படுத்தி உயிர்பழியாகி ஏற்பட்டால்தான் சரிசெய்வார்களா என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பகுதியில் விவசாய நிலங்களுக்கு ஆடு. மாடு. போன்றவைகளை அழைத்து செல்லும் போது தினம் தினம் அச்சத்துடனே செல்வதாக., பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனே மின்வாரிய துறை அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் கீழே தாழ்வான பகுதியில் தொங்கும் மின்வயர்களை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!