18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது குடிப்பதற்கு பணம் தராத தாயைத்தாக்கிய மகன் கைது

மது குடிப்பதற்கு பணம் தராத தாயைத்தாக்கிய மகன் கைது

எழுதியவர்: mohan September 11, 2019, 2:39 pm

கன்னியாகுமரி மாவட்டம் ,நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சிசிலெட்(50) இவருடைய மகன் மெர்லின் ஜோஸ் (29) . சம்பவத்தன்று தனது தாய் சிசிலெட்டிடம் மது குடிப்பதற்கு மெர்லின் ஜோஸ் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே , மெர்லின் ஜோஸ் அவரை கெட்டவார்த்தை பேசி, கத்திரிகோலால் கழுத்து ,கை , காது போன்ற இடங்களில் காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் சிசிலெட் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் .ஜான் விக்டர்  குற்றவாளி மெர்லின் ஜோசை கைது செய்து  வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!