17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அகில இந்திய அளவில் பாளையங்கோட்டை கலை அறிவியல் கல்லூரி முதலிடம்-பல்கலைக்கழக தேசிய தர மதிப்பீட்டுக் குழு அறிவிப்பு

அகில இந்திய அளவில் பாளையங்கோட்டை கலை அறிவியல் கல்லூரி முதலிடம்-பல்கலைக்கழக தேசிய தர மதிப்பீட்டுக் குழு அறிவிப்பு

எழுதியவர்: mohan September 10, 2019, 4:29 pm

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தூய சேவியர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.இங்கு பயிற்றுவிக்கப்படும் பாடங்களோடு சேர்த்து நல்லொழுக்க பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஆய்வின்படி அகில இந்திய அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளது.

இந்திய அளவில் ஏழு காரணிகளை மையமாக வைத்து இந்த தர மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அவை முறையே கல்லூரியில் பாடம் பயிற்றுவிக்கும் முறை, ஆய்வு பணி, அடிப்படை வசதிகள், மாணவர்களின் ஆதரவு, கல்லூரியின் தனிச்சிறப்பு போன்ற தனித்திறன்கள் அடிப்படையில் இந்த கல்லூரிக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தரமதிப்பீட்டு குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!