17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்தமபாளையம், காவல் துறையின் அதிரடி வேட்டையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் .இருவர் கைது,

உத்தமபாளையம், காவல் துறையின் அதிரடி வேட்டையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் .இருவர் கைது,

எழுதியவர்: mohan September 10, 2019, 2:54 pm

அனுமந்தன் பட்டி கிராமம் மேற்கே கோம்பை ரோட்டில் கஞ்சாவியாபாரம் நடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதுகாவல்துணைக்கண்காணிப்பாளர்அய்யாக்கண்ணு உத்தரவுப்படி, ஆய்வாளர் முருகன்,சார்பு ஆய்வாளர் முனியம்மா மற்றும் காவலர்கள் உதவியுடன்கம்பம் முதல் கோம்பை ரோட்டில் சிலுவை குருசு அருகேதீவிர சோதனை நடத்தினர், அப்பொழுது சந்தேகத்திற்கிடமான இருவர் பைகளுடன் வந்துள்ளனர்,அவர்களை சோதனை செய்த போது அவர்கள் கொண்டு வந்த பையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, உடனே இருவரையும் காவல் நிலையம்அழைத்து விசாரணை செய்ததில்,கம்பம் விவேகானந்தர் தெருவைச்சேர்ந்த கோட்டையன் மகன் ஈஸ்வரன், மற்றும் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த செல்லத்துரைமனைவி மொக்கப் பிள்ளை என்பதும், விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கொண்டு வந்ததாகவும் இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர்,  இருவர் மீதும் வழக்குப்பதிவு மேலும் விசாரித்து வருகின்றனர், .

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!