17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் மனைவி பிரிந்துசென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை. போலீசார் விசாரனை

உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் மனைவி பிரிந்துசென்றதால் மனமுடைந்த கணவர் தூக்குப்போட்டு தற்கொலை. போலீசார் விசாரனை

எழுதியவர்: mohan September 10, 2019, 2:32 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்தவர் பரமன் மகன் கல்யாணி (30). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (28). கணவர் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் கல்யாணி வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் இருவருக்குமிடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில் கணவரிடம் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என கூறிவிட்டு வீட்டை விட்டு மனைவி வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கல்யாணி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.காலையில் வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது கல்யாணி தூக்கு மாட்டியது தெரியவந்தது. தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று கல்யாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!