17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பனங்கள்ளி கிராம மக்கள் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கேட்டு இரண்டு மாணி நேரம் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பனங்கள்ளி கிராம மக்கள் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கேட்டு இரண்டு மாணி நேரம் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு.

எழுதியவர்: mohan September 10, 2019, 12:11 pm

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள  பூகானஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்டது பனங்கள்ளி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்பில்   ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு  ஒகேனக்கல்கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சரியாக குடிதண்ணீர் வழங்காமல்  வாரத்திற்கு இரண்டுமுறை ஒரு முறை மட்டும் வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக  ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் இக்கிராமத்திற்கு முற்றிலும் வருவதில்லை. குடிநீர் வராததால், பனங்கள்ளி கிராம மக்கள் கடும் அவதிவுற்றனர். இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கிராம மக்கள் மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், வேறுவழியின்றி ஆத்திரமடைந்த 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று தருமபுரி-பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். நீண்டநேரம் அதிகாரிகள் வராததால்  தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  பின்னர் தகவல் அறிந்து வந்த பாலக்கோடு வட்டாட்சியர் வெங்கடேசன் மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் தங்கள் கிராமத்திற்கு மீண்டும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றுனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல்  நடைபெற்ற இந்த சாலை மறியலால் பள்ளி,கல்லுõரிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பேருந்துகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!