ராமநாதபுரம் அருகே காட்டூரணி பகுதியைச் சேர்ந்தவர் நம்புகா ஜன். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சோபனா, 41. இவர் அரசு போக்குவரத்து கழக நகர் பணிமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருடன் மூன்று பெண்கள் தனக்கு மிகுந்த தொந்தரவு அளிப்பதாகவும, பணியின் போது அதிக சிரமம் ஏற்படுத்துவதாகவும் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் விரக்தியடைந்த சோபனா உடன் பணிபுரியும் மூன்று பெண்கள் தனது சாவிற்கு காரணம் என கடிதம் . வைத்து இன்று அதிகாலை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் . ஷோபனா உடலை கேணிக்கரை போலீசார் மீட்டனர்.. இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போக்குவரத்து கழக பெண் ஊழியர் கிணற்றில் குதித்து தற்கொலை
எழுதியவர்: mohan September 10, 2019, 10:34 am




You must be logged in to post a comment.