ராமேஸ்வரம் அருகே நடராஜபுரம் மீனவர்கள் மதன், இளங்கேஸ்வரன், சாந்தகுமார், உமாகாந்த் ஆகியோர் மல்லிபட்டினம் கடலில் கடந்த வாரம் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிரிழந்தனர். இவர்களது குடும்பங்களுக்கு
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் (முன்னாள் அமைச்சர்) டாக்டர் எம். மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்த நான்கு மீனவர் குடும்பங்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கினார். உயிரிழந்த மீனவ குடும்பங்களின் பொருளாதார நிலை குறித்து முதலமைச்சரிடம் எடுத்து கூறி மீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய ரூ.5 லட்சம் நிதியை விரைவில் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இறந்த மதன் மனைவி ஜெயலலிதாவுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்.
மண்டபம் ஒன்றிய அதிமுக., செயலாளர் எம்.கே.கே. தங்க மரைக்காயர், ராமேஸ்வரம் அதிமுக நகர் செயலாளர் கே.கே.அர்ச்சுணன், தொகுதி முன்னாள் இணை செயலாளர் தஞ்சி பி.சுரேஷ், ராமேஸ்வரம் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் குணசேகரன் , ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் எம்.வீரபாண்டியன்மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.




You must be logged in to post a comment.