17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மர்மப் படகில் இலங்கை வாலிபர் தனுஷ்கோடியில் கைது

மர்மப் படகில் இலங்கை வாலிபர் தனுஷ்கோடியில் கைது

எழுதியவர்: mohan September 10, 2019, 10:15 am

இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் வாலிபர் ஒருவர், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு வந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்படி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். அரிச்சல்முனை கடற்கரையில் நடந்துவந்த இலங்கை வாலிபரை ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.விசாரணையில், அவர் இலங்கை வவுனியா செட்டி குளம் அருண்ராஜ், 24, எனவும் அவரது பெற்றோர் 1990ல் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பரமத்தி அகதிகள் முகாமில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவரது தந்தை இறந்ததையடுத்து தாயார் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடு சென்று விட்டார். விமானத்தில் கடந்தாண்டு இலங்கை சென்று செட்டிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிய அருண்ராஜ்,இலங்கை குடியுரிமை கோரி விண்ணப்பித்து இதுவரை கிடைக்காததால் இந்தியா திரும்ப முடிவு செய்து, மன்னாரில் இருந்து ரூ.15 ஆயிரம் கொடுத்து படகில் வந்த தன்னை தனுஷ்கோடியில் இறக்கி விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அருண்ராஜ் கைது செய்யப்பட்டார்.தனுஷ்கோடி வந்திறங்கிய வாலிபருடன் வேறு யாரும் வந்தனரா? என கியூ பிரிவு போலீசார் . விசாரித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!