18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்போன் பாதுகாப்பு பெட்டக கட்டணம் குறைப்பு அமல்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்போன் பாதுகாப்பு பெட்டக கட்டணம் குறைப்பு அமல்.

எழுதியவர்: mohan September 10, 2019, 9:55 am

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது .தீ விபத்து ஏற்பட்ட பின் கோவிலுக்குள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில் செல்போன் கோயிலுக்கு எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டது .இதற்காக பாதுகாப்பு பெட்டக கட்டணமாக ரூபாய்10 வசூலிக்கப்பட்டு வந்தது .  செல்போன் பாதுகாப்பு பெட்டக கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோவில் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசுக்கும் பல்வேறு கோரிக்கைகளை விடுத்திருந்தனர் .இநநிலையில் நேற்று 09/09/2019 கோவில் நிர்வாகம் பத்து ரூபாய் கட்டணத்தை 5 ரூபாய் என குறைத்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது இது இன்று 10.09.19 முதல் அமலில் வரும் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!