18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நாடார் புதுத்தெருவில் தேங்கி நிற்கும் சாக்கடைநீரால் சுகாதாரகேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச் சாட்டு

உசிலம்பட்டி நாடார் புதுத்தெருவில் தேங்கி நிற்கும் சாக்கடைநீரால் சுகாதாரகேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச் சாட்டு

எழுதியவர்: mohan September 9, 2019, 2:54 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் உள்ளது நாடார்புதுதெரு. இந்த தெருவில் பெரிய வணிக வளாகங்களும், கடைகளும் இயங்கிவருகிறது. இந்நிலையில் கடைகளில் உபயோகிக்கும் நீர் அனைத்தும் சாக்கடை வழியாக செல்கின்றது.தற்போது இச்சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடையில் உள்ள கழிவு நீர் அனைத்தும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரகேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த சாக்கடை அடைப்பு கடந்த 1மாத காலமாக நீடித்தும் இதுவரை நகராட்சி அதிகாரிகள் சரிசெய்யாமல் மெத்தனப்போக்காக செயல்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் சாக்கடையை சரிசெய்து நோய்களிலிருந்து காப்பாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!