மதுரை மாவட்டம் வடக்கு வெளி வீதி தனியார் மென்பொருள்
விற்பனை நிலையத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்ப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கணினி மற்றும் கணினி உதிரி பாகங்கள் சேதமடைந்தன. மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள தனியார் கணினி விற்பனை நிலையத்தில் நேற்று 08.09.19 இரவு சுமார் 10.30 மணி அளவில் புகை வந்துள்ளது. பின் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டு வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் கலந்த பொருள் என்பதால் அப்பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது எனினும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் துரித செயல்பாட்டால் அடுத்தடுத்து கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதம் என தெரிய வருகிறது .தீ விபத்து குறித்து திலகர் திடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.