17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் போடப்படும் பேவர் ப்ளாக் சாலைகள்…முறைப்படி பதிய SDPI கட்சி நேரடி மேற்பார்வை..

கீழக்கரையில் போடப்படும் பேவர் ப்ளாக் சாலைகள்…முறைப்படி பதிய SDPI கட்சி நேரடி மேற்பார்வை..

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2019, 5:53 pm

கீழக்கரை நகராட்சிகுட்பட்ட 11,12 வது வார்டு பகுதியில் இன்று (08/09/2019) பேவர் பிளாக் ரோடுகள் போடப்பட்டு வருகிறது.  ஆனால் நகராட்சியின் வழிகாட்டுதல் படி இல்லாமல் முறையற்ற வகையில் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.  இத்தகவலின் அடிப்படையில் SDPI கட்சியின் நிர்வாகிகள் சாலை போடப்படும் இடத்திற்கு சென்று  அதை முறையாக போடுமாறு மேற்பார்வையாளர் மூர்த்திக்கு அலை பேசியில் வலியுறுத்தினர்.

SDPI நிர்வாகிகளின் வலியுறுத்தல் தொடர்ந்து மேற்பார்வையாளர்  முறையாக போடுவதாக வாக்குறுதி அளித்தார்.  இந்த சந்திப்பில்  இணை செயலாளர் முர்ஸலீன்,  மேற்கு கிளை பொருளாளர் சகுபர் அலி,  செயற்குழு உறுப்பினர் கீழை அஸ்ரப்,  ஜின்னா தெரு ஜமாஅத் தலைவர் சபீக் ஆகியோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!