தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட பேளாரஅள்ளி ஊராட்சியில் நான்கு ரோடு பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு உயர்மின் விளக்கு பெருத்தப்பட்டது. சோதனைக்காக மட்டும் மின் இணைப்பு கொடுத்து பின்பு நிறுத்தப்பட்டு உள்ளது. பாலக்கோடு நான்கு ரோட்டிலிருந்து புறவழிச்சாலை இணைப்பு, நகருக்கு செல்லும் சாலை, பெரியம்பட்டி சாலை சந்திப்பு, மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை என 24மணி நேரம் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. மேலும் நான்கு ரோடு பகுதியில் போதிய தெருவிளக்கு, மற்றும் உயர்மின் விளக்கு எரியததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இது குறித்து ஊராட்சி செயலாளிடம் புகார் தெரிவித்தால் வரும்போது வரும் தெருவிளக்கு வேண்டும் என்றால் மின்சார ஊழியர்களை வரவழைத்து சரிசெய்துகொள்ளுங்கள் என அலச்சியமாக பதில் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உயர்மின் விளக்கிற்கு மின்இணைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Attachments area




You must be logged in to post a comment.