17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயிரிழந்த பள்ளி மாணவன் கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பிடு வழங்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

உயிரிழந்த பள்ளி மாணவன் கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பிடு வழங்க வேண்டும்: காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

எழுதியவர்: mohan September 8, 2019, 3:02 pm

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கார்த்தீஸ்வரன் ஆசிரியர் தமிழரசு அறிவுறுத்தல் படி மின் மோட்டார் ஸ்விட்ச் போட சென்ற போது மின்சாரம் பாய்ந்து மாணவர் கார்த்தீஸ்வரன் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது.அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவர் கார்த்தீஸ்வரன் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியரின் மெத்தன போக்கை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. இனி வரும் காலங்களில் இது போண்ற ஆபாத்தான வேலைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுத்துகிறது .

மாணவர் கார்த்தீஸ்வரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.எனவே : மாணவர் கார்த்தீஸ்வரன் உயிரிழப்புக்கு காரணமாக உள்ள ஆசிரியரை நிரந்தர பணியில் இருந்து உடனடியாக நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த கார்த்தீஸ்ரன் குடும்பத்திற்கு இழப்பிடு 20 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!