17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற கையேழுத்து முகாம்கள் தொடக்கம்…

கீழக்கரையில் மதுக்கடைகளை அகற்ற கையேழுத்து முகாம்கள் தொடக்கம்…

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2019, 2:51 pm

கீழக்கரையில் விதிமுறைகளுக்கு முரணாகவும், பொதுமக்களுக்கு இடையூராகவும் இருக்கும் இரண்டு மதுபானக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கையேழுத்து பெற்று சமூக அமைப்புகள் சார்பாக தமிழக முதல்வரை சந்திக்கும் முகமாக இன்று (08/09/2019) கீழக்கரையில் பொதுமக்களிடம் கையேழுத்து பெறும் முகாம் தொடங்கியது.

வள்ளல் சீதக்காதி சாலை இஸ்லாமிய கல்வி சங்கத்தில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் அப்தாகீர் முகாமை தொடங்க ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம் முதல் கையேழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் பழைய குத்பா பள்ளி செயலாளர் ஜெய்னுத்தீன், மஃதூமிய மேல்நிலை பள்ளி துணைத்தாளாளர் அசனுத்தீன், கிழக்குத்தெரு ஜமாஅத் துணைத்தலைவர் முஹம்மது அஜிஹர், வீரகுல தமிழர் படை தலைவர் பிரபாகரன், இஸ்லாமிய கல்வி சங்க பொருளாளர் சல்மான் கான்,மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம், சட்ட விழிப்புணர்வு இயக்க உறுப்பினர்கள் தாஜூல் அமீன், சுல்பிகார் அலி, காதர் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து கையேழுத்து பெறும் இரண்டாவது முகாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்குத்தெரு பள்ளியில் வடக்கு கிளை தலைவர் கண்மணி சீனி முகாமை தொடங்கி வைக்க கிளை செயலாளர் அப்துல் கரீம் முதல் கையேழுத்திட்டார்.இந்த முகாமில் கிளை பொருளாளர் அன்வர்தீன்,மாவட்ட பேச்சாளர் சர்தார் அலி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!