18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விவசாயம் தழைக்க, மழை பொழிய வேண்டி பெருமாள் கோயிலில் கோ தானம்…

விவசாயம் தழைக்க, மழை பொழிய வேண்டி பெருமாள் கோயிலில் கோ தானம்…

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2019, 1:37 pm

இராமநாதபுரம் அருகே மாயபுரத்தைச் சேர்ந்தவர் செட்டியப்பன்,70. இயற்கை மீது தீராத பற்று கொண்ட பாரம்பரிய விவசாயி. மழையை நம்பி விவசாயம் செய்து இவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழையின்மையால், விவசாயம் பாதித்து பல்லாயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் கவலையடைந்தன. இந்நிலையில் மழை பொழிந்து விவசாயம் தழைக்க வேண்டி திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு கோ-தனம் செய்வதாக செட்டியப்பன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வேண்டிக் கொண்டார்.

இதை தொடர்ந்து தன் வீட்டில் வளர்த்த உயர் இன காராம் பசு மற்றும் கன்றுக்குட்டியை திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு அழைத்து வந்தார். செட்டியப்பன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் பசு, கன்றுக்குட்டி க்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பசு, கன்றுக்குட்டிக்கு தூய வெண்ணிற துண்டு போர்த்தப்பட்டது. மஞ்சள், குங்குமம் பூசி தீபாராதனை காட்டப்பட்டது. நாட்டுச் சர்க்கரை, வாழைப்பழம், பச்சரிசி உணவாக வழங்கப்பட்டு, பூஜைகள் நிறைவேற்றிய ஜெயராம பட்டரிடம் பசு, கன்றுக்குட்டியை செட்டியப்பன் தானம் கொடுத்தார். பசு, கன்றுக்குட்டிக்கு 10 நாட்களுக்கு தேவையான வைக்கோல், புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை செட்டியப்பன் வழங்கினார்.

செட்டியப்பன் கூறுகையில்,  உலகம் அமைதி பெறவும், மழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் மகிழ்வாக வாழ வேண்டி திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் கோயிலுக்கு என் வீட்டில் செல்லமாக வளர்ந்த 5 காம்பு பால் காம்புகள் உடைய அபூர்வ இன காராம் பசு, கன்றுக்குட்டியை தானம் கொடுத்தேன் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!