18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்..மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் உத்தரவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்..மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் உத்தரவு

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2019, 1:33 pm

இராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம், கமுதி பசும்பொன்னில் அக்.30ல் தேவர் குரு பூஜை கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நினைவிடங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தல் தொடர்பாக பல்வேறு சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஆக.29 ஆம் தேதி நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க வருபவர்கள் வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில்  நாளை (செப்.9) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி நாளை (செப்.9) முதல் செப்.15 வரை, அக்.25 முதல் அக். 31 வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இக்கால கட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!