18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய தமிழகம் கட்சியில் 30 பேர் கொண்ட தேனி மாவட்ட அமைப்பு குழு

புதிய தமிழகம் கட்சியில் 30 பேர் கொண்ட தேனி மாவட்ட அமைப்பு குழு

எழுதியவர்: mohan September 7, 2019, 7:24 pm

புதிய தமிழகம் கட்சியின் தேனி மாவட்ட தலைமை அலுவலகத்தில் தேனி மாவட்ட செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் தலைமையில் தேனி மாவட்ட அமைப்பு குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .. இக் கூட்டத்தில் 30 பேர் கொண்ட தேனி மாவட்ட அமைப்பு குழு உருவாக்கப்பட்டது . இக் கூட்டத்தில் தேனிபாராளுமன்ற செயலாளர் பழ.நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் பொ.பாலசுந்தரராஜீ , மாவட்ட நிர்வாககுழு கலைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் வேல்மணி , கருப்புத்துரை , தேவேந்திர பாலா , தேனிஒன்றிய செயலாளர் வீரபாண்டி முருகன், கம்பம் ஒன்றிய செயலாளர் P.ஈஸ்வரன் , பாளையம் ஒன்றிய செயலாளர் சோனைகருப்புச்சாமி, பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மூ.செல்வக்குமார், ஆண்டிபட்டி ஒன்றிய பொறுப்பாளர் முருகேசன், நகர பொறுப்பாளர்கள் அல்லிநகரம் முருகேசன் , கம்பம் பவுன்ராஜ் , சமூக ஆர்வலர் அழகுராஜா, வழக்கறிஞர் நாகராஜ் , மற்றும் முன்னாள் , இன்னாள் மாவட்ட , ஒன்றிய , நகர , சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆறு உட்பிரிவுகளில் அழைக்கப்படும் மக்களை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றைப் பெயரில் அழைக்க தமிழகஅரசு குழு அமைத்தது .. இதனை ஏற்று தமிழக அரசு தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் காலம் தாழ்த்தாமல் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட அமைப்பு குழு வலியுறுத்துகிறது . இந்த வேளான் மக்களை பட்டியலின பிரிவில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!