17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுகாதார சீர்கேட்டால் மாணவர்கள் அவதி : தொற்றுநோய் பரவும் முன் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

சுகாதார சீர்கேட்டால் மாணவர்கள் அவதி : தொற்றுநோய் பரவும் முன் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

எழுதியவர்: mohan September 7, 2019, 4:54 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள காந்திநகர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. பட்டியல் இனத்தைச் சார்ந்த ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி அருகில் பொதுக் கழிப்பறை உள்ளது. இவை சுத்தமாக இல்லாததால் இப்பள்ளி அருகில் திறந்த வெளியில் பலரும் மலம் கழித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது.இப் பள்ளிக்கூடத்தின் அருகே பாம்பாற்று ஓடை செல்கின்றது. இந்த ஓடையில் கழிவுகள், கழிவுநீர், குப்பைகள் கொட்டப்படுவதனால் அதிக அளவில் துர்நாற்றம் வீசுவதோடு , சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்களை தொற்று நோயில் இருந்து காக்கும் வகையில் தாமரைக்குளம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!