17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை தாம்பரம் விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு-மகிழ்ச்சி வெள்ளத்தில் ரயில் பயணிகள்

நெல்லை தாம்பரம் விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு-மகிழ்ச்சி வெள்ளத்தில் ரயில் பயணிகள்

எழுதியவர்: mohan September 7, 2019, 3:51 pm

நெல்லை-தாம்பரம் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலுக்கு கடையம் ரயில் நிலையத்தில் 05.09.19 வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. திருநெல்வேலியிருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக தாம்பரத்திற்கு வியாழக்கிழமைகளில் விரைவு ரயில் இயக்கப்பட்டது.இந்த ரயில் கடையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தென்மண்டல ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து சா.ஞானதிரவியம் கோரிக்கை விடுத்தார். இதை அடுத்து இந்த ரயில் கடையத்தில் நின்று செல்ல உத்தரவிடப்பட்டது.இதனால் மகிழ்ச்சியடைந்த பயணிகள் வியாழக்கிழமை மாலை ரயில் பயணிகள் சங்க மாவட்ட நிர்வாகி அந்தோணி தலைமையில் இனிப்பு வழங்கி வரவேற்றனர். இந்நிகழ்வில் நிலைய கண்காணிப்பாளர் கணேசன்,நிலைய அலுவலர் ராஜலிங்கம் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!